[சமீபத்திய செய்திகள்...][5]

#thamilnadu
Breaking News
BreakingNews
BreakingNews FuelPrice SriLankaNews
Cinema
Jaffna
News
Tamil News
world news
இந்தியா
இலங்கை
யாழ்ப்பாணம்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு சிறைத்தண்டனை!

 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பிரகாரம், பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதியிடம் பொலிஸ் சார்ஜன்ட்  500 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு அதன் பிறகு நான்கு குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுக்களிலும் பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 20,000 ரூபாய் அபராதமும், இலஞ்சமாக பெற்ற 500 ரூபாவை திருப்பிக்கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.



SunTamil 'Online Radio

SunTamil News உடனுக்குடன் செய்திகளை பார்வையிட... மற்றும் SunTamil Online Radio கேளுங்கள்...

No comments:

Post a Comment

Start typing and press Enter to search