[சமீபத்திய செய்திகள்...][5]

#thamilnadu
Breaking News
BreakingNews
BreakingNews FuelPrice SriLankaNews
Cinema
Jaffna
News
Tamil News
world news
இந்தியா
இலங்கை
யாழ்ப்பாணம்

திமுக கோட்டை சிதறியது: தவெக எழுச்சி – தமிழக அரசியலில் புதிய திருப்பம்!


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகப்பெரிய முன்னிலை பெற்று அரசியல் சூழலை மாற்றியுள்ளது.

கிடைத்த தகவலின்படி, தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளன. சில கட்டங்களில் அதிமுக மற்றும் திமுக இரண்டாம் இடத்திற்காக கடுமையான போட்டியில் இருந்த நிலையில், தற்போது திமுக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் கடும் போட்டி நிலவி, தவெக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதாக ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன. மேலும், அமைச்சரவை உறுப்பினர்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

76 ஆண்டுகள் அரசியல் வரலாற்றைக் கொண்ட திமுகவும், 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவமுள்ள அதிமுகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், குறுகிய காலத்தில் உருவான தவெக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கையிலும் தவெக கணிசமான முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், ஒரு கோடியை கடந்த ஆதரவை கட்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் மொத்த வாக்கு விகிதத்துடன் போட்டியிடும் அளவிற்கு தவெக முன்னேறியுள்ளது.

காலை முதல் பிற்பகல் வரை வெளியான பல கட்ட நிலவரங்களிலும் தவெக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தபால் வாக்குகள் முதல் மின்னணு வாக்கு எண்ணிக்கை வரை, பெரும்பாலான சுற்றுகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

இன்றைய தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் கவனம் ஈர்த்துள்ளன. மாலை நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.


SunTamil 'Online Radio

SunTamil News உடனுக்குடன் செய்திகளை பார்வையிட... மற்றும் SunTamil Online Radio கேளுங்கள்...

No comments:

Post a Comment

Start typing and press Enter to search