கொல்கத்தாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவர் தொடர்பான வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண மாயமான வழக்காக கருதப்பட்ட இந்த சம்பவம், தற்போது கொலை மற்றும் சட்டவிரோத உறவு தொடர்பான முக்கிய குற்றவியல் விசாரணையாக மாறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த 16 வயதுடைய மாணவன், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், மாணவனை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால் வழக்கு நீண்டகாலமாக முடங்கிய நிலையிலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பழைய செல்போன்களை பழுது பார்க்கும் கடையில் கிடைத்த சில டிஜிட்டல் தகவல்கள் இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பழுதடைந்த ஒரு மொபைல் சாதனத்தில் இருந்து மீட்கப்பட்ட காணொளிகள் மற்றும் தகவல்களில், காணாமல் போன மாணவருக்கும் ஒரு பெண் ஆசிரியைக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்தமை தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியையும் அவரது கணவரும் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மாணவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட உறவை மையமாகக் கொண்டு குடும்பத்திற்குள் கடுமையான மோதல்கள் ஏற்பட்டதாகவும், அதுவே பின்னர் குற்றச் சம்பவமாக மாறியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், மாணவன் உயிரிழந்த பின்னர் அவரது உடல் நகர புறப்பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடயவியல் பரிசோதனைகள் மூலம் அவை காணாமல் போன மாணவருடையவைதான் என உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், ஆசிரியைக்கு பிறந்த குழந்தையின் தந்தை தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் கல்வி அமைப்புகள், மாணவர் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வழக்கின் முழு உண்மைகளையும் வெளிக்கொணர காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.
மொனராகலை மாவட்டத்தில் யானைகளின் இயற்கை வாழ்விடங்களையும் பாரம்பரிய இடம்பெயர்வு பாதைகளையும் பாதிக்கக்கூடியதாகக் கூறப்படும் ஒரு நில ஒதுக்கீட்டு...
No comments:
Post a Comment