[சமீபத்திய செய்திகள்...][5]

#thamilnadu
BreakingNews FuelPrice SriLankaNews
Cinema
Jaffna
News
Tamil News
world news
இந்தியா
இலங்கை
யாழ்ப்பாணம்

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு!

 சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ₹180 குறைந்து, ஒரு கிராம் ₹13,820 ஆக உள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹1,440 குறைந்து ₹1,10,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, மே 4ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹14,000 அளவில் இருந்தது, சவரன் ₹1,12,000 வரை சென்றது. சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கம் காரணமாக விலையில் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து காணப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ₹5,000 குறைந்து ₹2,65,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.



SunTamil 'Online Radio

SunTamil News உடனுக்குடன் செய்திகளை பார்வையிட... மற்றும் SunTamil Online Radio கேளுங்கள்...

No comments:

Post a Comment

Start typing and press Enter to search